மத்வரை இன்றும் காணும் மாதவ தீர்த்தர்
மத்வரை இன்றும் காணும் மாதவ தீர்த்தர்
![]() |
ஸ்ரீ மாதவ தீர்த்தர் |
மாதவத்தீர்த்தரின் இயற்பெயர், விஷ்ணு சாஸ்திரி. மத்வரின் கொள்கையில் ஈர்க்கப்பட்டு மத்வாசாரியாரின் சிஷ்யர் ஆனார். மத்வ மக்களுக்கு நல்லதோர் வழிகளை காட்டினார்.
மத்வாச்சாரியாரின், நேரடி சிஷ்யர்கள் நான்கு மஹான்கள். ஸ்ரீ பத்மநாப தீர்த்தர், ஸ்ரீ நரஹரி தீர்த்தர், ஸ்ரீ மாதவ தீர்த்தர் மற்றும் ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர்.
ஒரு முறை மாதவ தீர்த்தர், நித்திய பூஜைகளை (திக்விஜய ராமர், மூல ராமர் மற்றும் மூல சீதையை ஸ்ரீ மடத்தின் மற்ற பிரதிமைகளுடன் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது) செய்துக்கொண்டிருந்த போது, திடீரென்று அவர் தனது இடத்தை விட்டு நகர்ந்து, அவரது புனிதத்தன்மைக்கு மட்டுமே தெரியும் ஒரு சிறந்த ஆளுமையை வணங்கினார். முழு பூஜையும் முடிந்தது, ஸ்ரீ மாதவ தீர்த்தர் கண்ணுக்கு தெரியாத ஒருவரிடமிருந்து புனித தீர்த்தத்தை (புனித நீரை) மிகவும் பயபக்தியுடன் எடுத்துக் கொண்டார்.
இதனை கவனித்துக்கொண்டிருந்த மத்வ மக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. மாதவ தீர்த்தர் புன்னகையுடன் என்ன நடந்தது என்பதனை பற்றி பேசத் தொடங்கினார். ``ஸ்ரீ மத்வாச்சாரியார் இன்றும் நித்ய பூஜைகளை செய்து வருகிறார். எங்களை (சிஷ்யர்கள்) சில சமயங்களில் அழைத்து தீர்த்தம் கொடுப்பார். அது இன்று நடந்தது என்றார். ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர் பண்டரிபுரத்தில் ஸ்ரீ பிரசன்ன விட்டலை வழிபட்டபோது இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
``பராசர மத்வ-விஜயா" என்ற பராசரஸ்ம்ருதிக்கு அவர் ஒரு விளக்கவுரையை இயற்றியுள்ளார்.மேலும், சில பாடல்களும் அவரது அங்கிதத்துடன் கிடைத்துள்ளது. ரிக், யஜுர் மற்றும் சாம வேத விளக்கங்களும் தந்துள்ளார்.
ஸ்ரீ மாதவ தீர்த்தரின் மூல பிருந்தாவனம் மண்ணூரில் உள்ளது.
மன்னூர், குல்பர்கா மாவட்டத்தின் கீழ் வருகிறது. குல்பர்காவிலிருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ளது. குல்பர்காவிலிருந்து மன்னூருக்கு பேருந்து வசதி உள்ளது.
- தொகுப்பு.ரா.ரெங்கராஜன்
கருத்துகள்
கருத்துரையிடுக